பரீட்சை பெறுபேறுகள் பார்க்க சென்ற இளைஞர்கள் சிறையில் அடைப்பு!

ஹம்பாந்தோட்டையில் ஏற்பட்ட பதற்றமான சம்பவம் தொடர்பில் அதற்கு சம்பந்தமற்ற நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அண்மையில் வெளியான உயர்தர பரீட்சை பெறுபேறுகள் பார்வையிடுவதற்காக சென்றவர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக நாமல் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கடமை நிறைவடைந்து வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்த பலரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரின் நலம் விசாரிப்பதற்காக தங்காலை சிறைச்சாலைக்கு சென்ற சந்தர்ப்பத்தில் நாமல் ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment