ஆப்பிளின் ஐபோனிற்கு வயது எத்தனை தெரியுமா?

இன்று ஸ்மார்ட் கைப்பேசிகள் பாவிக்காதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அனைவரது வாழ்விலும் முக்கிய இடத்தைப் பெற்றுவிட்டது. கைப்பேசிகள் இன்று பல்வேறு பரிணாமத்தைப் பெற்று நிற்கின்ற போதிலும் ஆப்பிள் நிறுவனமே முதன் முறையாக ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்தது. அதாவது 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் திகதி அறிமுகம் செய்தது. இவ்வாறு அறிமுகம் செய்து இன்றுடன் 10 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டது. இதற்கிடையில் பல்வேறு தொழில்நுட்ப புரட்சிகளைச் சந்தித்து இன்று உலகெங்கிலும் அதிகளவில் விற்பனையாகும் கைப்பேசிகளுள் ஒன்றாகத் திகழ்கின்றது.ஐபோன்கள் முதன் முதலாக 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்டிருந்த போதிலும் முதலாவது விற்பனையானது அதே ஆண்டு ஜுன் மாதம் அமெரிக்காவிலும், நொவெம்பர் மாதம் ஐரோப்பிய நாடுகளிலும் இடம்பெற்றிருந்து. 2007ம் ஆண்டில் மட்டும் 3.4 மில்லியன் ஐபோன்களை விற்பனை செய்திருந்தது. அத்துடன் அன்றிலிருந்து இன்றுவரை சுமார்…

Read More

கொலைகாரனை காட்டிக்கொடுத்த ஆவி..! நம்பினால் நம்புங்கள்

இங்கிலாந்தில் பெண் ஒருவர் தன்னை கொலை செய்த தனது கணவனை ஆவியாக வந்து காட்டிக்கொடுத்துள்ள திகில் கதை நடந்துள்ளது. ஆனால், இது இப்போது கிடையாது 1690 ஆம் ஆண்டு நடந்த சம்பவம். பேய் என்ற ஒன்று இருக்கிறதா? என்ற கேள்வி இந்த சமுதாயத்தில் பல நூற்றாண்டுகளாக அனைவரின் காதுகளிலும் ஒழித்துக்கொண்டிருக்கிறது. ஒரு சிலர் பேய் இருக்கிறது என்று சொன்னாலும், பலர் பேய் இல்லை என்று சொல்வார்கள். ஆனால் ஒரு விடயத்தை திரும்ப திரும்ப சொல்லிவிட்டால் அதனை நம்பும் அளவுக்கு இந்த சமுதாயம் தள்ளப்படுகிறது. ஆக மொத்தத்தில் பேய் இருக்கிறது என்ற கருத்துதான் அதிகமாக மேலோங்கி வருவதால், அதனை நம்பும் மனிதர்கள் தான் இந்த சமூகத்தில் அதிகம் என்பதை நீங்கள் தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும். அப்படி நம்மை நம்ப வைக்கும் விதமாக நடந்துள்ள சம்பவம் தான் இது, இங்கிலாந்தில் வசித்து…

Read More

ஆபிரிக்க நாடு ஒன்றில் இருந்து புலிகளின் விமானம் முதன் முறையாக வன்னி வந்தது

ஆபிரிக்க நாடு ஒன்றில் இருந்து புலிகளின் விமானம் முதன் முறையாக வன்னி வந்தது விடுதலைப் புலிகள் பலமாக இருந்த கால கட்டத்தில் சிலின் 143 என்ற இலகு ரக வானூர்திகளை அவர்கள் கொள்வனவு செய்து. அதனை வன்னிக்கு தருவித்து இருந்தார்கள். இந்த விமானங்கள் இரண்டும், முதன் முறையாக வன்னி நிலப்பரப்பை எட்டியவேளை எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்கள் தான் இவை. பின்னரே அவற்றை புலிகள் போர் விமானங்களாக மாற்றி. குண்டுகளை சுமந்து சென்று தாக்கும் விதத்தில் வடிவமைத்தார்கள். பின்னர் சில முக்கிய விமான எதிர்ப்பு ஏவுகணைகளை வன்னிக்குள் கொண்டுவர இவர்கள், சில முறை இந்த விமானத்தை பயன்படுத்தி நடுக் கடலில் நின்ற தமது கப்பலில் இருந்து ஆயுதங்களையும் தருவித்தார்கள். இதனை இவர்கள் எவ்வாறு கடலில் இறக்கி ஏற்றினார்கள் என்பது இதுவரை புரியாத புதிர் தான். கடல் விமானத்தை போல…

Read More

கீர்த்தியா இப்படி? எது உண்மை?

தெலுங்கு திரையுலகில் தனது வளர்ச்சியை பிடிக்காத யாரோ தன்னை பற்றி வதந்தி பரப்புவதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளார் கீர்த்தி சுரேஷ். அவர் விஜய்யுடன் சேர்ந்து நடித்துள்ள பைரவா படம் வரும் 12ம் திகதி வெளியாக உள்ளது. தனக்கு மவுசு அதிகரித்துள்ளதை உணர்ந்து கீர்த்தி தனது சம்பளத்தையும் உயர்த்தியுள்ளார். தெலுங்கில் நானிக்கு ஜோடியாக நேனு லோக்கல் படத்தில் நடித்து வருகிறார் கீர்த்தி. முன்பு எல்லாம் படப்பிடிப்புக்கு ஒழுங்காக சென்ற அவர் தற்போது குளறுபடி செய்வதாக தகவல் வெளியானது. தெலுங்கு முன்னணி நடிகர்களில் ஒருவரான பவர் ஸ்டார் பவன் கல்யாண் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் கீர்த்தி. பவன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆன பிறகே அவர் நானியின் படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பு தருவது இல்லை என்று கூறப்படுகிறது. படப்பிடிப்புக்கு தாமதமாக வருகிறாராம்….

Read More

மயங்கி விழுந்தார் மாவை சேனாதிராஜா..! வைத்தியசாலையில் அனுமதி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா மயங்கி விழுந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் பாராளுமன்றில் இன்று இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் கனேடிய தமிழர்கள் மூவருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தபோதே மாவை சேனாதிராஜா திடீரென்று மயக்கமடைந்துள்ளார் என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக அவர் ஸ்ரீ ஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். எனினும், அவருக்கு ஆபத்தான நிலைமைகள் எதுவும் இல்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. Send to Facebook

Read More

ஐந்து பொலிஸ் அதிகாரிகளுக்கு மரண தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு

பதுளையில் ஐந்து பொலிஸ் அதிகாரிகள் உட்பட ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பதுளை மேல் நீதிமன்ற நீதவான் இந்த உத்தரவை இன்றைய தினம் பிறப்பித்துள்ளார். 2014ஆம் ஆண்டு கண்டக்கெட்டிய பொலிஸ் தடுப்புக் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவரின் கொலை வழக்கிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கொலை தொடர்பான வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Send to Facebook

Read More

மகளின் புத்தகத்தை படித்து 50 வயதில் உயர்தரம் பரீட்சை எழுதிய தாய்!

மகளின் புத்தகத்தை படித்து 50 வயதில் தாயார் ஒருவர் உயர்தரம் பரீட்சை எழுதிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சுபாஷினி விக்ரமசிங்க என்பவர் உயர் தரத்திற்காக உயிரியல் பாடத்தில் தோற்றியுள்ளார். காணப்பட்ட சூழலுக்கு மத்தியில் உயர்தரத்திற்கு முகம் கொடுக்கும் சந்தர்ப்பம் ஒன்று அவருக்கு கிடைக்கவில்லை. 1986ஆம் ஆண்டு அவர் வீரகெட்டிய ராஜபக்ச மத்திய மகா வித்தியால மாணவியாக அவர் பரீட்சைக்கு ஆயத்தமாகியுள்ளார். பின்னர் பரீட்சையை தூரமாக வைத்துவிட்டு அவர் திருமணத்தை தெரிவு செய்துள்ளார். படிப்பதற்கு ஆசை இருந்த போதிலும் பிள்ளைகள் இருவரும் பெரியர்களாகும் வரை அவரது அந்த மூடி மறைக்கப்பட்டது. குடும்பத்தில் இளைய மகள் கடந்த வருடம் உயர்தர பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளதோடு பல்கலைக்கழகத்திற்கும் தெரிவாகியுள்ளார். அம்மாவின் கல்வி ஆசைக்கு மகளிடம் இருந்து கிடைத்த உதவியினால் 2016ஆம் ஆண்டு அவர் உயர்தர பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளார். குறித்த தாயார்…

Read More

காயங்களை குணப்படுத்தும் செயற்கை சிலந்தி வலையை உருவாக்கி விஞ்ஞானிகள் அசத்தல்!

மனிதர்களுக்கு அவர்களின் வாழ் நாளில் ஒரு முறையேனும் உடல் பாகங்களில் காயங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். இவ்வாறு ஏற்படும் காயங்களை குணப்படுத்துவதற்கு தற்போது பேண்டேஜ்கள், பிளாஸ்டர்கள் காணப்படுகின்றன. எனினும் ஐக்கிய இராச்சியத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு படி மேலே சென்று காயங்களை குணப்படுத்தக்கூடிய செயற்கை சிலந்தி வலைகளை உருவாக்கியுள்ளனர். ஆன்டிபயோட்டிக்கினை கொண்டிருக்கும் இச் சிலந்தி வலைகள் காயம் ஏற்பட்ட இடங்களில் சுற்றிக் கட்டப்படும். இவ்வாறு கட்டப்பட்டதன் பின்னர் அவற்றிலிருந்து காயங்களை குணப்படுத்தும் மருந்து தானாகவே செலுத்தப்படுவதுடன், தொற்றுக்கள் ஏற்படுவதிலிருந்தும் தடுக்கும். இவ் வலையானது E. coli பக்டீரியாக்களிலில் இருந்து சுரக்கப்படும் சில்க் போன்ற திரவத்தினைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. மேலும் ஐந்து ஆண்டுகள் மேற்கொண்ட கடுமையான ஆராய்ச்சியின் விளைவாகவே தற்போது வெற்றிகரமாக இந்த செயற்கையான சிலந்தி வலை உருவாக்கப்பட்டுள்ளது. Send to Facebook

Read More

உங்க ஸ்மார்ட்போன் சூடாகாமல் இருக்கணுமா? இதை மட்டும் செய்யுங்க

உலகளவில் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஸ்மார்போன்களில் பொது பிரச்சனையாக பலருக்கும் இருப்பது சீக்கிரம் அது அதிக சூடாகி விடுவது தான். அப்படி சூடாவதை தடுப்பது எப்படி? ஸ்மார்ட்போன்களை அதிக நேரம் சார்ஜ் போடகூடாது. பலர் சார்ஜ் போட்டு விட்டு அப்படியே மறந்து விடுவார்கள். இது தவறாகும். மொபைல் போனில் நடக்கும் மின்னணு பொருட்களின் செயல்பாடுகள் மூலமே வெப்பமானது உருவாகிறது. பெரும்பாலும் அதிவேகமாக இயங்கக்கூடிய மொபைல் போன்கள் அடிக்கடி சூடாகும். ஒரே நேரத்தில் பல விதமான செயலிகளை உபயோகப்படுத்தகூடாது. இதனால் செல்போனின் வேகம் குறைவதுடன் அது சீக்கிரம் சூடாகி விடுகிறது. 3G மற்றும் 4G போன்ற தரவுகளை அதிக நேரத்திற்கு பயன்படுத்தினால் போனுக்கு வெப்பம் உண்டாகும். ஸ்மார்ட்போனை தொடர்ந்து பல மணி நேரம் விளையாடுவதற்கு பயன்படுத்தினால் போன் வெப்பம் அடைகின்றது ஸ்மார்ட்போனின் ஓஎஸ்…

Read More

துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரம் யார்? கசிந்த தகவல்கள்

துருவ நட்சத்திரம் படம் குறித்து தினமும் கௌதம் மேனன் ஒரு தகவலை வெளியிட்டு வருகிறார். இப்படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்தது. தற்போது விக்ரம் கமிட் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளிவந்தது. இதில் ஜான் என்ற கதாபாத்திரத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார், மேலும் அவர் இண்டர்நேஷ்னல் ஸ்பை அதிகரியாக நடிக்கின்றாராம். Send to Facebook

Read More

பைரவா புதிய சாதனை! இத்தனை நாடுகளில் வெளியாகிறதா?

விஜய்யின் பைரவா வெளிவர இன்னும் 4 நாட்கள் உள்ளன. படத்தை காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் உள்ளனர். இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பைரவா பெரிய அளவில் வெளிவரவுள்ளது. வழக்கமாக வெளிவரும் நாடுகளோடு சேர்த்து தற்போது சில புதிய நாடுகளிலும் பைரவா வெளிவரவுள்ளது. நைஜீரியா, கானா, கென்யா போன்ற ஆப்பிரிக்க நாடுகள் மட்டுமின்றி ரஷ்யா, போலந்து போன்ற நாடுகளோடு சேர்த்து மொத்தம் 55 நாடுகளில் பைரவா வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வந்துள்ளது. இதன் மூலம், நாடுகள் எண்ணிக்கையில் பைரவா புதிய சாதனை படைத்துள்ளது. Send to Facebook

Read More

ஏ.ஆர்.ரகுமானால் கௌரவிக்கபட்ட இலங்கை இராஜாங்க அமைச்சர்

இலங்கை, மலேசியா, சிங்கபூர் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களின் கல்வியை மேம்படுத்த இந்திய மத்திய அரசு, உலகெங்கும் உள்ள தமிழ் அமைப்புகள் உதவ வேண்டும் என சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழர் திருவிழாவில் வலியுறுத்தப்பட்டது. உலக தமிழர் திருநாள், உலக தமிழ் வம்சாவளியினர் ஒன்று கூடும் நிகழ்ச்சி ஆகியவை சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் வி.ஐ.டி. பல்கலைக்கழக முதல்வர் ஜி.விசுவநாதன் உரையாற்றிய போது, உலகில் எந்தெந்த நாடுகளில் நல்ல கல்வி போதிக்கப்படுகிறதோ அங்குள்ள மக்கள் வளமுடன் உள்ளனர். மலேசியாவில் கடந்த 1957 ஆம் ஆண்டில் 40 சதவீத தமிழர்கள் நல்ல கல்வியைப் பெற்றிருந்தனர். ஆனால் தற்போது அது 2 சதவீதமாகக் குறைந்துவிட்டது. அந்த நாட்டில் வேலை வாய்ப்பு பெற்ற தமிழர்கள் 8 சதவீதம் உள்ளனர். ஆனால் சிறையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 60…

Read More