லண்டனில் மர்மமான சடலம்… (படம் இணைப்பு )

இங்கிலாந்து கம்ரியா பகுதியில், ஆண் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Workington பகுதியில் ஜி.எம்.டி நேரப்படி 07.30 மணியளவில் ஆண் ஒருவர் படுகாயமுற்று வீதியில் கிடப்பதாக அவசர சேவைப் பிரிவினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற அவசர சேவைப் பிரிவினர் குறித்த ஆண் உயிரிழந்து விட்டதாக அறிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய ஆண் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இது குறித்து கருத்து தெரிவித்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

Leave a Comment