பெரும் சிரமத்தில் வர்த்தகர்கள்

நீர்ப்பாசணத்திணைக்களத்தினரும் இவ்வீதியில் பாரிய நீர்ப்பாசண பணியொன்றினை மேற்கொண்டுவருகின்றனர் மேலும் நீர்ப்பாசன தினைக்களத்தினால் கடந்த இரண்டு தினங்களுக்கு மேலாக இவ்வீதியில் வைரவர்புளியங்குளம் சந்தியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக பாரிய குழிகள் வெட்டப்பட்டு குழாய்கள் பொருத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனினும் இரண்டு தினங்களாகியும் அப்பாரிய குழிகள் இதுவரையிலும் மூடப்பவில்லை இதனால் அப்பகுதியில் காணப்படும் வர்த்தகர்கள் பெரும் சிரமத்திற்கு ஆலாவதாகவும் வியாபாரம் தடைப்படுவதாகவும் விசனம் தெரிவிக்கின்றனர் இது தொடர்பாக நீர்ப்பாசண பொறியியலாளர் ஒருவரை தொடர்பு கொண்டபோது ஊடகவியலாளர் தொடர்பு கொண்டுள்ளோம் என அறிவித்தும் அவர் அதை பொருட்படுத்தாத வகையில் தமக்கு இது சம்பந்தமாக பதில் கூற முடியாதென்றும் தமக்கு இப்பொழுது நேரமில்லையெனவும் தெரிவித்தார் Send to Facebook

Read More

இளைஞன் கொடூரமாக அடித்து கொலை

வவுனியா தேக்கவத்தை மயானத்துக்கருகில் கானப்படும் அம்மன் கோவில் அருகாமையில் வாடகைக்கு தனது பாட்டியுடன் வாழ்ந்து வந்த 25வயதான பாலரஞ்சன் பாலநிசாந்தன் என்கின்ற இளைஞனே இவ்வாறு கொடூரமாக தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார் இவரது பெற்றோர் வெளிநாடு ஒன்றில் வசித்து வருவதாகவும் மனைவி நையினாதீவில் வசிப்பதாகவும் அறியப்படுகிறது இவர் குடியிருந்த வீட்டிற்கு முன்பாக இருந்த மற்றுமொரு இல்லத்தில் வைத்தே சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பொலிஸார் சம்பவ இடத்தில் தற்சமயம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் Send to Facebook

Read More

விரக்தியில் சட்டத் துறையை கைவிட்ட – ராவிராஜ் மகள்

வழக்குத் தீர்ப்பானது முதுகில் குத்தப்பட்டதாக உணர்த்தியது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் நடராஜா ரவிராஜின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பத்து ஆண்டுகளின் பின்னர் ரவிராஜின் குடும்பத்தினர் முதல் தடவையாக ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளனர். கடந்த 2006ம் ஆண்டு நடராஜா ரவிராஜ் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.இது தொடர்பிலான வழக்குத் தீர்ப்பு அண்மையில் வழங்கப்பட்டிருந்தது. குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஐந்து பேரும் குற்றமற்றவர்கள் என அளிக்கப்பட்டிருந்த தீர்ப்பு தொடர்பில் சட்ட பட்டதாரியான ரவிராஜின் புதல்வி பிரவீனா ரவிராஜூம், மனைவி சசிகலா ரவிராஜூம் கருத்து வெளியிட்டுள்ளனர். கொழும்பில் பிரபல பாடசாலை ஒன்றின் கணித ஆசிரியராக சசிகலா கடமையாற்றி வருகின்றார். நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் நீதி கிட்டும் என பெரிதும் எதிர்பார்த்ததாகவும் எனினும், வழக்குத் தீர்ப்பு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் அளிக்கும் வகையில் அமைந்திருந்தது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்….

Read More

கிளிநொச்சி மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவிகள்! விபரம் உள்ளே

அகில இலங்கையில் பேச்சு கட்டுரை போட்டிகளில் முதலிடம் பெற்று கிளிநொச்சி மண்ணுக்கு பெருமை சேர்த்த சாமந்தி அபிராமி என்ற சகோதரிகள்.   குறித்த இத்தகு ஆற்றல்களை மண்ணில் வளர்த்தெடுப்பதற்கும் காரணமாய் இருந்த அவரது பெற்றோர் ஆசிரியர்கள் வரலாற்றில் முக்கியமாணவர்கள். சாமந்தி அபிராமி இவர்களால் அந்த மண்ணின் பெருமையை உலகறியச் செய்தமை வரலாற்றின் முக்கிய பதிவுகளாகும்… Send to Facebook

Read More

10 வயது தமிழ் சிறுவன் 400 மொழிகளை கற்று சாதனை(காணொளி)

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 10 வயது அக்ரம் என்ற மாணவர் கலந்து கொண்டு 400 மொழிகளில் சரமாரியாகப் பேசி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். மொழி வல்லுனராகி அனைவருக்கும் அனைத்து மொழிகளையும் கற்று தரவேண்டும் என்பதே தனது குறிக்கோள் என்றும் அவர் கூறினார். இவர் இஸ்ரேலில் படித்து வருவதாகவும் தமிழ்கிங்டொத்தின் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளதோடு தான் பங்குற்றிய நிகழ்வு காணொளிகளையும் எம்மோடு பகிர்ந்து கொண்டார். வாழ்க்கைக்கு ஐந்து மொழிகளும், வாழ்வதற்கு ஆறு மொழிகளும் தெரிந்திருக்க வேண்டும் என்பது மாணவர் அக்ரம் கொடுத்த கூடுதல் தகவல். புத்திக் கூர்மையை மேம்படுத்துவது எப்படி? தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் குழந்தைகளின் புத்தி கூர்மையை மேம்படுத்துவது எப்படி ? என்பது தொடர்பான பயிற்சி நடைபெற்றது….

Read More

வாட்ஸ் அப்பில் GIF பைல்களை அனுப்புவது இனி ஈஸி

வாட்ஸ் அப் பீட்டா வெர்ஷனில் GIF பைல்களை அனுப்புவது இனி ரொம்ப ஈஸி, Giphy மூலமாக, GIF-களை தேடும் வசதியையும் வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முதலில் நீங்கள் பீட்டா டெஸ்டராக உங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும், இதற்கு கூகுள் ப்ளே ஸ்டோர் சென்று வாட்ஸ் அப்பில், “Become a Beta Tester” என்ற ஆப்ஷனை தெரிவு செய்து, I Am In என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். பின்னர் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்யும் போது இந்த வசதி கிடைக்கப்பெறும். வழக்கமான எமோஜிகளுக்கு அருகே இந்த புதிய வசதியும் இருக்கும், குறிப்பிட்ட GIF-களை தேடி பெறும் வசதியும் உள்ளது. மிக முக்கியமாக ஒரே முறையில் 30 புகைப்படங்களை அனுப்பவும் முடியும், விரைவில் இந்த அற்புதமான வசதி அனைவருக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Send…

Read More

யாழில் வீதிகளில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்த நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்கள் மற்றும் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டச் சிவில் பாதுகாப்புக்குழுக் கூட்டம் நேற்று யாழ்.மாவட்டச் செயலகத்தில் உள்ள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில் பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் பொதுமக்களால் முறைப்பாடு வழங்கப்பட்டது. அந்தவகையில் இக் கூட்டத்தில் கலந்து கொண்ட யாழ்.வணிகர் சங்கத்தின் தலைவர் ஆர்.ஜெயசேகரம் கருத்து தெரிவிக்கும் போது.. வீதிப் போக்குவரத்து கடமையில் உள்ள பொலிஸார் பொது மக்களை மதிப்பது இல்லை. குறிப்பாக வீதி ஓரமாக ஒழித்து நின்றுவிட்டு திருடர்களை மடக்கிப் பிடிப்பதைப் போல் திடீரென வீதிக்கு ஓடி வந்து வாகனங்களை மறிக்கின்றார்கள். மேலும் இரவு வேளைகளில் வீதியின் இரண்டு பக்கமும் நிற்கும்…

Read More

‘சித்திரவதையும் படுகொலைகளும் விசாரிக்கப்பட வேண்டும் ” தொடரும் சத்தியாகிரகப் போராட்டம்!

திருகோணமலையில் சத்தியாகிரகப் போராட்டமொன்று இன்று (11) முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ”ஆர்ப்பபட்டக்காரர்கள் கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்” மற்றும்” சித்திரவதையும் படுகொலைகளும் விசாரிக்கப்பட வேண்டும்” போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதேவேளை, திருகோணமலை மாவட்ட சமூக ஆர்வலர் ஒன்றியம் மேற்படி சத்தியாகிரகப் போராட்ட த்தை ஒழுங்கு செய்துள்ளது. Send to Facebook

Read More

நாளுக்கு நாள் கேள்விக்குறியாகும் சமகால அரசியல் நிலைமை..

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று கூறுவார்கள். அரசாங்கத்தில் உள்ள ஒரு சில உறுப்பினர்கள் வெளியிடும் கருத்துக்கள் அரசாங்கத்தின் வங்குரோத்து நிலையை நன்கு படம்போட்டு காட்டுகிறது. ஒரு புறம் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, தேசிய நல்லிணக்க அரசாங்கம் தொடர்ந்தும் நிலைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். அடுத்த ஜனாதிபதி தேர்தலிலும் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவே போட்டியிடுவார் என்று அமைச்சர் எஸ்.பி.திஸ்ஸாநாயக்க தெரிவித்திருக்கிறார். ஆனால் அவ்வாறான ஒரு தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் தெரிவித்திருக்கிறார். இது அமைச்சர் திஸாநாயக்கவின் கூற்றுக்கு எதிர்ப்பாகவே தெரிவித்திருக்கிறார். ஏற்கெனவே சந்திரிகா அம்மையார் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. மறுபுறம் பிரதமர் தனி அதிகாரத்துடன் சீன கம்பனிகளுடன் ஒப்பந்தங்களை செய்து வருகிறார். இந்த நாட்டை யார் ஆட்சி…

Read More

தேரர்களும் வீதிக்கு இறங்குவார்கள்! அரசு இனவாதம் பேசுமா? இனவாதம் அழிக்குமா?

தற்போதளவில் உலக நாடுகளிடையே இலங்கைக்கான அடையாளம் என்ன? இலங்கை ஒரு இனத்துவமிக்க நாடு, தமிழர்களுக்கு ஒரு சட்டம்,சிங்களவர்களுக்கு ஒரு சட்டம் என்றே அமுல்படுத்தப்படுகின்றது. இச்செயல் இலங்கை அரசின் இயலாமையை காட்டுகின்றது. இதுவே பலரினதும் கருத்தாக அமையும். இதற்கு அடிப்படையாக அமைந்த விடயமாகத்தான் அண்மைக்கால அரசியல் போக்கும் அமைந்துள்ளது. மேலும் அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பில் என ஆர்ப்பாட்டங்களும் நடந்து முடிந்திருக்கின்றன. இதுப்போன்ற சம்பவங்கள் இலங்கைக்கு புதிதல்ல, இதுப்போன்ற சம்பவங்கள் பலவும் இதற்கு முன்னர் நடந்துள்ளன. ஆனால் இலங்கையில் வெடிக்கும் போராட்டங்களில் எல்லாம் அண்மைக்காலமாக தேரர்களின் பங்களிப்பும் மேலோங்கியுள்ளமைதான் ஆச்சரியப்பட வைக்கின்றது. இலங்கையில் தற்போது முன்னெடுக்கும் ஆட்சிமுறையானது. பொதுக்கட்டமைப்பை வெளிப்படுத்தும் ஆட்சி முறையாகத்தான் அமைந்துள்ளது. குறிப்பாக பிரேமதாச அரசில் எவ்வாறான அரசியல் முறை நடைமுறைப்படுத்தப்பட்டதோ அதேப்போன்றதொரு முறைத்தான் தற்போது நடைமுறைப்படத்தப்படுத்தப்படுகின்றது. அதாவது பிரேமதாச ஆட்சிக்காலத்தில் தேரர்களுக்கு நாட்டின்…

Read More

நீரில் மூழ்கி இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி!

வெலிகம – புதிய வீதி அருகில் கடற்பரப்பில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். காலி – மாதுவத்த பிரதேசத்தினை சேர்ந்த இளைஞரே இவ்வாறு நேற்று மாலை உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் மேலும் சில இளைஞர்களுடன் நீராடிக் கொண்டிருந்த பொழுதே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. Send to Facebook

Read More

ஜனாதிபதியை ஆட்சி கவிழ்க்கும் திட்டம் கிடையாது! ஜீ.எல்.பீரிஸ்

ஜனாதிபதிய ஆட்சி கவிழ்க்கும் திட்டம் கிடையாது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். புஞ்சிபொரளையில் நேற்று நடைபெற்ற செய்தியாளார் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக குற்றப்பிரேரணை கொண்டு வந்து அவரை அதிகாரத்திலிருந்து நீக்கும் திட்டங்கள் கிடையாது. 2017ஆம் ஆண்டில் ஆட்சி கவிழ்ப்பது என்பது ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்குவதற்காக அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார். நாம் ஒருபோதும் குற்றப் பிரேரணைப பற்றி பேசியதில்லை. மேன்மைதாங்கிய ஜனாதிபதிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது பற்றி யாரும் பேசவில்லை. பிரதமர் மற்றும் அவரது அமைச்சரவைக்கு எதிராகவே பேசுகின்றோம். பிரதமர் தொடர்பில் நாடாளுமன்றில் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் நம்பிக்கையில்லை. பிரதமர் ரணில் விக்ரமசிங்க உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இதுவே கூட்டு எதிர்க்கட்சியின் நோக்கமாக அமைந்துள்ளது. நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு ஜனாதிபதி…

Read More