பிரித்தானியாவில் நாளை நடக்க போவது என்ன..? மஞ்சள் எச்சரிக்கை விடுவிப்பு

பிரித்தானியாவின் பல பாகங்களிலும் நாளைய தினம் கடும் குளிருடனான காலநிலை நிலவும் என அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து பகுதிகளில் வெப்பநிலை கணிசமான அளவு குறையும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தின் பல பகுதிகளிலும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, இந்த வாரத்தின் இறுதியில் கடுமையான மழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், இது குறித்த உறுதியாக எதுவும் கூறமுயாது என அந்நாட்டு வானிலை ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts

Leave a Comment