மட்டக்களப்பில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை!! வெளியாகும் சில திடுக்கிடும் காரணங்கள்…

18 வயது மாணவன் தூக்கிட்டு தற்கொலை. வந்தாறுமூலையில் சம்பவம். விஸ்வலிங்கம், சுலோசனா தம்பதிகளுக்கு குணாலன் (18)என்ற. மகனும், கர்ஷிகா என்ற (13) மகளும்தான் பிள்ளைகளாவர். தந்தை விஸ்வலிங்கம் டெலிகொம் நிறுவனத்தில் தொழில் நுட்ப உதவியாளராகவும், தாய் சுலோசனா மாவடிவேம்பு, விக்னேஸ்வரா வித்தியாலயத்தில் ஆசிரியையாகவும் தொழில் புரிகின்றனர். வழமையாக அண்ணனும், தங்கையும் TV பார்க்கும்போது ஆளுக்கொரு செனல் பார்க்க வேண்டுமென்பதில் சண்டை பிடித்து கொள்வதுண்டு. நேற்று (10-01-2017) மாலை 07.30 மணியளவில் அண்ணன், தங்கையான குணாலன், கரிஷீகா ஆகியோர் வீட்டில் TV பார்த்துக்கொண்டிருக்கும் போது தனக்கு விருப்பமான “செனல் “மாற்றுவதில் சண்டை நடந்ததால் , அப்பா விஸ்வலிங்கம் வந்து, இருவரையும் படிக்கச் சொல்லி கூறிவிட்டு, TV யை Off பண்ணியதும் இருவரும் எழுந்து வெவ்வேறு அறைகளுக்குள் சென்றுவிட்டனர். இரவு 08.45 மணியளவில் சாப்பிடுவதற்காக அழைத்த போது, மகன் வராததால்,…

Read More

கணவனைக் கொன்ற இலங்கைப் பெண்ணுக்கு அவுஸ்திரேலியாவில் புகலிடம்

மேற்கு அவுஸ்திரேலியாவில் தனது கணவனைக் கொன்ற குற்றத்திற்காக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மருத்துவர் சாமரி லியனகேவுக்கு அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவர் சாமரி லியனகே, தனது சிறைத் தண்டனை நிறைவடைந்த பின்னர் தன்னை நாடு கடத்த வேண்டாம் என அந்நாட்டு குடிவரவு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். குறித்த பெண் மருத்துவர்சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பாலியல் துன்புறுத்தல்கள் உட்பட பல்வேறு வழிகளில் சித்திரவதை செய்ததாகக் கூறப்படும் அவரது கணவனை , கடந்த 2014ம் ஆண்டு ஜுன் மாதம் அவர்களது இல்லத்தில் வைத்து சுத்தியலால் அடித்துக் கொலை செய்திருந்தார். இருப்பினும் ரத்துச் செய்யப்பட்டிருந்த சாமரி லியனகேயின் விசாவை மீள புதுப்பித்து தருவதாக அந்நாட்டு குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் தனது பாதுகாப்பு மற்றும் குடும்பத்தின் நலனைக் கருத்திற்கொண்டு, தன்னை நாடு கடத்த…

Read More

பரீட்சை பெறுபேறுகள் பார்க்க சென்ற இளைஞர்கள் சிறையில் அடைப்பு!

ஹம்பாந்தோட்டையில் ஏற்பட்ட பதற்றமான சம்பவம் தொடர்பில் அதற்கு சம்பந்தமற்ற நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அண்மையில் வெளியான உயர்தர பரீட்சை பெறுபேறுகள் பார்வையிடுவதற்காக சென்றவர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக நாமல் குறிப்பிட்டுள்ளார். மேலும் கடமை நிறைவடைந்து வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்த பலரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளனர். கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவரின் நலம் விசாரிப்பதற்காக தங்காலை சிறைச்சாலைக்கு சென்ற சந்தர்ப்பத்தில் நாமல் ராஜபக்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். Send to Facebook

Read More

யாழில் வீதிகளில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்த நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் குற்றச் செயல்கள் மற்றும் வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கமராக்கள் பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட சிரேஸ்ர பொலிஸ் அத்தியட்சகர் கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டச் சிவில் பாதுகாப்புக்குழுக் கூட்டம் நேற்று யாழ்.மாவட்டச் செயலகத்தில் உள்ள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில் பொலிஸாரின் நடவடிக்கைகள் தொடர்பில் பொதுமக்களால் முறைப்பாடு வழங்கப்பட்டது. அந்தவகையில் இக் கூட்டத்தில் கலந்து கொண்ட யாழ்.வணிகர் சங்கத்தின் தலைவர் ஆர்.ஜெயசேகரம் கருத்து தெரிவிக்கும் போது.. வீதிப் போக்குவரத்து கடமையில் உள்ள பொலிஸார் பொது மக்களை மதிப்பது இல்லை. குறிப்பாக வீதி ஓரமாக ஒழித்து நின்றுவிட்டு திருடர்களை மடக்கிப் பிடிப்பதைப் போல் திடீரென வீதிக்கு ஓடி வந்து வாகனங்களை மறிக்கின்றார்கள். மேலும் இரவு வேளைகளில் வீதியின் இரண்டு பக்கமும் நிற்கும்…

Read More

இரண்டு மாதங்களில் 217 பேருக்கு எச்.ஐ.வி தொற்று…!

வடமேல் மாகாணத்தில் கடந்த 2 மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையினை அடுத்து 217 பேருக்கு எச்.ஐ.வி தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. குருநாகல் மாவட்டத்தில் 115 பேருக்கும் புத்தளம் மாவட்டத்தில் 102 பேருக்கும் எச்.ஐ.வி தொற்றியுள்ளமை தெரியவந்துள்ளதாக வடமேல் மாகாண தொற்று நோய்ப் பிரிவு தெரிவித்துள்ளது. வெளிநாட்டு தொழில் வாய்ப்பினை பெற்றுச் சென்று மீண்டும் நாடு திரும்புபவர்களுக்கே எச்.ஐ.வி தொற்று இருப்பதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக வடமேல் மாகாணம் எச்.ஐ.வி தொற்றில் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் தொற்று நோய்ப் பிரிவு கூறியுள்ளது. மேலும் இவ்வாறு தொற்றுக்குள்ளானவர்களுக்கு மருத்துவ வசதிகளும் தேவையான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Send to Facebook

Read More

2017 ஆம் ஆண்டு நடைபெறும் பாடசாலை பரீட்சைகளின் நேர அட்டவணை

இந்த வருடத்துக்கான பாடசாலை பரீட்சைகளின் நேர அட்டவணையை இன்றைய தினம் பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. க.பொ.த உயர் தரப் பரீட்சை க.பொ.த உயர் தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பித்து, செப்டம்பர் மாதம் 02 ஆம் திகதி நிறைவடையவுள்ளது. 5 ஆம் தரத்துக்கான புலமைப்பரிசில் 5 ஆம் தரத்துக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. க.பொ. த சாதாரண தர பரீட்சை க.பொ. த சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பித்து 21 ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது Send to Facebook

Read More

இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்

வவுனியாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்தானது இன்று காலை வவுனியா சாஸ்திரி கூழாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்தவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மறவன்குளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்து கொண்டிருந்த முச்சக்கரவண்டியுடன், பின்புறமாக வந்த மற்றுமொரு முச்சக்கரவண்டி மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதிகள் இருவருமே காயமடைந்துள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். Send to Facebook

Read More

பெண்களுக்கு உடலில் எங்கெல்லாம் மச்சம் இருந்தால் அதிர்ஷ்டம் என்று தெரியுமா?

ராசி, நட்சத்திரம், ஜாதகம், கைரேகை வைத்து ஒருவரை பற்றி கூறுவது போலவே, ஒருவரது உடலில் இருக்கும் மச்சங்களை வைத்தும் சிலர் அவர்களை பற்றி கூற முடியும் என்கிறார்கள். பொதுவாக மச்சம் கருப்பு நிறத்தில் இருக்கும் என்றாலும் சிலரது சரும நிறம் சார்ந்து அது தேன், சிவப்பு, பச்சை நிறங்களில் கூட காணப்படும். இந்த நிறத்தில் அமையும் மச்சங்கள் நல்ல அதிர்ஷ்டம் என்று கூறுகின்றனர். மச்சங்கள் அதிகமாக இருந்தால் அதிர்ஷ்டம் அதிகமாக இருக்குமாம். நெற்றி முகத்தின் வலது புறத்தில் மச்சம் இருந்தால் அந்த பெண்ணின் வாழ்வில் செல்வமும், ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். இவர்கள் கடவுள் நம்பிக்கையில் ஆழமாக இருப்பார்கள். இதுவே இடது புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களது வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக அமையாது என கூறுகின்றனர். இவர்கள் மத்தியில் சுயநலம் இருக்கும். மிக செல்லமாக இருப்பார்கள். கண்ணிமை வலது…

Read More

சாதனை படைத்த சாம்சுங்

இலத்திரனியல் உலகைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் Consumer Electronics Show (CES) நிகழ்வு இடம்பெறுவது வழக்கமாகும். இந்நிகழ்வின்போது பல இலத்திரனியல் சாதன வடிவமைப்பு நிறுவனங்களும் கலந்துகொண்டு அந்த ஆண்டு விற்பனைக்கு தயாராகவுள்ள பொருட்களை அறிமுகம் செய்தல் அல்லது புதிதாக வடிவமைக்க காத்திருக்கும் சாதனங்கள் தொடர்பிலான தகவல்களை தெரிவிக்கும். இது தவிர தலைசிறந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றுக்கு விருதுகளும் வழங்கப்பட்டுவருகின்றது. இவ்வருடத்திற்கான CES நிகழ்வானது அமெரிக்காவின் Las Vegas நகரில் இடம்பெற்றுவருகின்றது. இதில் சாம்சுங் சார்பாக 3,880 இற்கும் அதிகமான காட்சிப்படுத்துபவர்கள் பங்குபற்றியுள்ளனர். இதன்போது சாம்சுங் நிறுவனத்திற்கு 120 இற்கும் அதிகமான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுள் QLED TV, Chromebook Plus, Pro Plus உட்பட மேலும் பல சாதனங்களுக்கான விருதுகளும் அடங்கும். இதேவேளை CES ஆனது 50வது ஆண்டு நிறைவினைக் கொண்டாடுவதும் சுட்டிக்காட்டத்தக்கது….

Read More

“பைரவா” திரை விமர்சனம்

மருத்துவ மாணவர் சேர்க்கையில் நடைபெறும் அரசியலை முன்னெடுக்கிறது பைரவா. மேலும், சாமான்யன் சந்திக்கும் சில முக்கிய பிரச்னைகளை அவனது கோணத்தில் இருந்தே காட்டியிருக்கிறார்கள். இதனை, பொறுத்துக்கொள்ள முடியாமல் ஒருவன் தனி மனிதனாக பலம் வாய்ந்த அரசியல்வாதியை எப்படி எதிர்த்து போராடுகிறான் என்பது திரைக்கதை. படத்தின் முதல் பாதி காமெடி + காதல் என நகர்ந்து கொண்டிருக்க , சிறிய ஃப்ளாஷ்பேக் ஒன்றை கூறி தன்னுடைய பிரச்னைகளை கதாநாயகனிடம் புரிய வைக்கிறார் கதாநாயகி. ஃப்ளாஷ்பேக் காட்சிகள் சற்று இழுவையாக இருந்தாலும், மோசமில்லை. இடைவேளைக்கு, சில நிமிடங்களுக்கு முன்பு இவ்வாறான பிரச்சனைகள் உள்ளது என்பதை கதாநாயகன் புரிந்து கொள்கிறார். அனல் பறக்கும் பஞ்ச் வசனங்கள், சண்டை காட்சியுடன் முடிகிறது பைரவாவின் முதல் பாதி. சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை படத்தின் மிகப்பெரிய பலாமாக பார்க்கப்படுகிறது. Send to Facebook

Read More

இராணுவ பெண் சிப்பாய்களின் உயிரைக் காத்த விடுதலைப் புலிகளின் ‘சிறுத்தை சிறப்புப் படை’ போராளிகள்! –

1998ம் ஆண்டு காலப்பகுதி அது. விடுதலைப்புலிகளின் சிறுத்தைப் படையணி எனப்படும் சிறப்பு கொமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்த எட்டு போராளிகள் மன்னார் பகுதியில் பதுங்கித்தாக்குதல் ஒன்றினை நடத்துவதற்காக திட்டமிட்டனர். மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி அடிக்கடி ஸ்ரீலங்கா இராணுவ வாகனங்கள் செல்வது வழமை.ஆனால் பலத்த பாதுகாப்போடு தான் வாகன அணி செல்லும். சிறுத்தைப் படையணி போராளிகளும் தாக்குதலுக்கு தயாராகினர். அதாவது மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி செல்லும் இராணுவ பஸ்ஸினை இடைமறித்து தாக்குதல் நடத்துவது தான் திட்டம். போராளிகள் தாக்குதலுக்காக பதுங்கியிருந்தனர். இராணுவ தொடரணி அன்று வரவில்லை.மாறாக ஒரு பஸ்ஸில் மட்டும் இராணுவத்தினர் வந்துகொண்டிருந்தனர். அந்த வாகனத்தின் மீதி ஆர் பி ஜி 22 மூலம் முதல் தாக்குதல் நடப்பட்டு பஸ் நிறுத்தப்படுகிறது. சிறுத்தைப் படைப்போராளிகளும் துப்பாக்கிச் சூடு நடத்தியவாறு பஸ்ஸினை நோக்கி சென்றனர்.பஸ்ஸில் இருந்தும் பதில் தாக்குதல்…

Read More

விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்ட இளம் ஜோடி

இரத்தினபுரி நகர எல்லையில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த இளம் ஜோடி அறைக்குள் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று பகல் இரத்தினபுரி நகரில் விடுதி ஒன்றில் அறை ஒன்றினை வாடகைக்கு எடுத்து தங்கிய ஜோடி நேற்றிரவு இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தற்கொலை செய்து கொண்ட ஜோடி தங்கியிருந்த அறையில் இருந்து நேற்றிரவு சத்தம் கேட்டுள்ளது அதனைத் தொடர்ந்து விடுதி ஊழியர்கள் அறையின் கதவை தட்டிய போதும் கதவு திறக்கப்படவில்லை. இதனையடுத்து அறையை திறந்து பார்த்த போது இருவரும் ஏதோ ஒரு பானத்தை அருந்திய நிலையில் விழுந்து கிடந்தமையை ஊழியர்கள் கண்டுள்ளனர். அதன் பின்னர் இவர்களை வைத்தியசாலையில் அனுமதிக்கும் முன்பே உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு உயிரிழந்த 27 வயதான ஆண் தேல நோரகொல்ல, பிரதேசத்தை…

Read More