முன்பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களை சந்தித்த ஆளுநர் றெயினோல்குரே

யாழ்ப்பாணம் மயிலிட்டி முன்பள்ளி சிறார்கள் இன்றையதினம் பலாலி விமானநிலையத்தை பார்வையிட்டனர். காலை 9:00 மணியளவில் விமானத்தில் யாழ் வருகை தந்த வடமாகாண ஆளுநர் றெயினோல்குரே குறித்த முன்பள்ளி சிறார்களையும் ஆசிரியர்கள் பெற்றோர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.  

Read More

சுவிசில் காவல்துறையால் கொலையுண்டவரின் குடும்பத்தை சுவிசுக்கு வரவழைக்க அரசு இணக்கம்!

சுவிற்சர்லாந்தின் திச்சினோ மாநிலத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிப் பலியான ஈழத் தமிழ் உறவு கரன் சுப்பிரமணியம் அவர்களின் குடும்ப உறுப்பினர்களை சுவிற்சர்லாந்துக்கு வரவழைக்க மத்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலாக அக்கறையுடன் செயற்பட்டுவரும் சுவிஸ் நாட்டின் இளம் அரசியல்வாதியான திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தம் வடிவேல் அவர்களோடு தொடர்பு கொண்ட சுவிஸ் வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் இந்தத் தகவலை உறுதி செய்தனர். அதேவேளை, இலங்கைக்கான சுவிஸ் நாட்டு தூதுவராலய அதிகாரிகளும் தர்சிகாக்காவைத் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளனர். எத்தனை பேருக்கு சுவிஸ் வருவதற்கான நுழைவிசைவு வழங்குவது என்பது தொடர்பிலான இழுபறியே தாமதத்திற்குக் காரணம் எனத் தெரிகின்றது. இதேவேளை, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்க சட்டத்தரணி ரஜீவன் லிங்கநாதன் முன்வந்துள்ளார். இந்த விவகாரத்தில் தொடர்ச்சியாக அக்கறையோடு செயற்பட்டுவரும் கதிரவன் குழுமம் சட்டத்தரணி ரஜீவன்…

Read More