இலங்கை முழுவதும் நடந்தே செல்லும் பெண்!

இலங்கை முழுவதும் 1268 கிலோ மீற்றர் நடந்து செல்லும் முயற்சியில் பெண்ணொருவர் ஈடுபட்டுள்ளார். குறித்த பெண் இன்று ஹங்கம நகரத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 10ஆம் திகதி கதிர்காமம், கிரிவெஹேர என்ற பிரதேசத்தில் இருந்து அவர் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார். தேவிகா காசிவெட்டி என்ற பெண்ணே இவ்வாறு பயணத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் எதிர்வரும் மே மாதம் கிரிவேஹேர என்ற பகுதியில் தனது பயணத்தை நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளார். கதிர்காமம், மாத்தறை, களுத்துறை, கொழும்பு, சிலாபம், மன்னார் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு சென்று மீண்டும் யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஊடாக கதிர்காமம், கிரிவேஹேர வரை கடல் வழியாக பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார். Send to Facebook

Read More

பிறந்தநாள்-வாழ்த்து செல்வன் வேலுப்பிள்ளை குலசாந்த்

செல்வன் வேலுப்பிள்ளை குலசாந்த் அவர்கள் (23.01.2017) திங்கட்கிழமை 24வது பிறந்த தினத்தை குடும்பத்தாருடன் வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார். கொடிகாமத்தை சேர்ந்த செல்வன் வேலுப்பிள்ளை குலசாந்த் அவர்கள் இறைவன் அருளால் இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று நலமாக வாழ சகோதரர்கள் , உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வாழ்த்துகின்றனர். செல்வன் 
 குலசாந்த் அவர்கள் எல்லா நலன்களும் பெற்று வாழ SL DAILY NEWS குடும்பம் சார்பாகவும் வாழ்த்துகின்றோம்…. தகவல் பிரமிலன் & Local Boys Send to Facebook

Read More

யாழ்ப்பாண இளைஞர்களின் ஜல்லிக்கட்டுக்கான ஆதரவுக் குரல். படங்கள்

யாழ்ப்பாண இளைஞர்களின் ஜல்லிக்கட்டுக்கான ஆதரவுக் குரல். தமிழரின் பாரம்பரியத்தினை நிலை நாட்டும் வகையிலான மாட்டு வண்டி வீதி உலா யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது… அதன் ஒர் அங்கமாக தமிழகத்தில் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கும் தமிழரின் வீர விளையாட்டான “ஏறு தழுவுதல்” – ஜல்லிக் கட்டிற்கான ஆதரவுக் குரல் யாழ் மண்ணிலிருந்து.. Send to Facebook

Read More

ஜேர்மனியில் அறிமுகமான பேஸ்புக்கின் Fake News Tool

சமூக வலைத்தளங்களின் வரிசையில் அசைக்க முடியாத அளவிற்கு முதலிடத்தில் திகழும் பேஸ்புக் ஆனது சமீப காலமாக பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றது. இதில் பாதகமான விடயங்கள் தொடர்பில் அதிகமாக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. இதன்படி பொய்யாக பரப்பப்படும் செய்திகள் அல்லது தகவல்கள் தொடர்பில் எச்சரிக்கை செய்யக்கூடிய அல்லது ரிப்போர்ட் செய்யும் டூல் ஒன்றினை அறிமுகம் செய்திருந்தது. இந்த டூல் ஆனது முதன் முறையாக அமெரிக்காவில் மட்டுமே அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. காரணம், அங்கு இடம்பெற்ற ஜனாதிபதித்தேர்தலின் போது பல பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டிருந்தன. எதிர்காலத்தில் இவ்வாறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்கும் நோக்கில் பேஸ்புக் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஜேர்மனியிலும் குறித்த டூலினை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி அமெரிக்காவிற்கு வெளியே முதன் முறையாக Fake News Tool அறிமுகம் செய்யப்படும் நாடாக ஜேர்மனி இடம்பிடித்துள்ளது….

Read More

கடவுச்சொல்லாக ECG- தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சி

தனிநபரின் உடல்நலம் குறித்த தகவல்களை பாதுகாக்க புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்காவின் பிங்கம்டன் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் ஒருவரான பேராசிரியர் ஷன்பெங் ஜின் கூறுகையில், தற்போதைய சூழலில் பயன்படுத்தப்படும் Encrypt தொழில்நுட்பங்கள் மிகவும் சிக்கல் நிறைந்தவையாகவும், செலவு பிடிப்பதாகவும் உள்ளது. எனவே இதற்கு பதிலாக மருத்துவதுறைக்கென்று பிரத்யேக தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இதன்படி ECG வரைபடத்தை கடவுச்செல்லாக பயன்படுத்தி அவரது உடல்நிலை குறித்த விபரங்களை பாதுகாக்கும் முறையை உருவாக்கி வருகிறோம். இதன்மூலம், நோயாளிகளின் உடல்நலம் குறித்த மின்னணு தகவல்களை சுலபமாகவும், மலிவாகவும் பாதுகாக்க வழி ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். Send to Facebook

Read More

இந்த 3 விடயங்களை மட்டும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்

திருமணத்திற்கு முன்னர் மற்றும் திருமணத்திற்கு பின்னர். இந்த இரண்டு விதமான வாழ்க்கைகளுக்கும் அதிக வித்தியாசம் உள்ளது. பலரது நிம்மதி திருமணத்திற்கு பின்னர் போய்விடுகிறது. இன்னும் சிலருக்கு திருமணத்திற்கு பின்னர்தான் நிம்மதியே கிடைக்கிறது. நிம்மதி என்ற உயிருள்ள வார்த்தை தம்பதியினர் வாழும் ஒழுக்கமான வாழ்க்கை முறையில் தான் இருக்கின்றது என்பதை அறிந்துகொள்ளுங்கள். திருமணத்திற்கு முன்னர் நீங்கள் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் சில விடயங்கள் உங்களுக்கு மன ஆறுதல் அளித்தாலும், திருமணத்திற்கு பின்னர் நீங்கள் சில விடயங்களை உங்கள் நண்பர்களிடம் முற்றிலுமாக பகிர்ந்துகொள்ளுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், மன ஆறுதலுக்காக நீங்கள் பகிர்ந்துகொள்ளும் சில விடயங்களே, உங்களின் மன நிம்மதியைம், மண வாழ்க்கையும் கெடுக்கும் வகையில் அமையலாம். அப்படி நீங்கள் பகிர்ந்துகொள்ளக்கூடாத 3 விடயங்கள் கணவன் மனைவி உறவு குறித்த விடயங்கள் திருமணத்திற்கு முன்னர் உங்கள் நண்பர்களிடம் Sex வாழ்க்கை…

Read More