இலங்கை முழுவதும் நடந்தே செல்லும் பெண்!

இலங்கை முழுவதும் 1268 கிலோ மீற்றர் நடந்து செல்லும் முயற்சியில் பெண்ணொருவர் ஈடுபட்டுள்ளார். குறித்த பெண் இன்று ஹங்கம நகரத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 10ஆம் திகதி கதிர்காமம், கிரிவெஹேர என்ற பிரதேசத்தில் இருந்து அவர் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளார். தேவிகா காசிவெட்டி என்ற பெண்ணே இவ்வாறு பயணத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் எதிர்வரும் மே மாதம் கிரிவேஹேர என்ற பகுதியில் தனது பயணத்தை நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளார். கதிர்காமம், மாத்தறை, களுத்துறை, கொழும்பு, சிலாபம், மன்னார் ஊடாக யாழ்ப்பாணத்திற்கு சென்று மீண்டும் யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஊடாக கதிர்காமம், கிரிவேஹேர வரை கடல் வழியாக பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக குறித்த பெண் தெரிவித்துள்ளார். Send to Facebook

Read More

மகிந்த ராஜபக்சவை ஸ்ரீல.சு.க. அமைச்சர்கள் சந்திக்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அனுமதி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஏழு பிரதான அமைச்சர்கள் ஏற்பாடு செய்த சந்திப்பு ஒன்றை திட்டமிட்டபடி நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அனுமதியளித்துள்ளார். நாளை ஞாயிற்றுக்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது. பிளவுபட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஒன்றிணைக்க இந்தச் சந்திப்பு வழிவகுக்கும் என்ற நம்பிக்கையின் பேரிலேயே இந்தச் சந்திப்புக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அனுமதியளித்துள்ளார். இச்சந்திப்பின்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒற்றுமையை வலியுறுத்துவதோடு, மகிந்த ராஜபக்ச மீண்டும் கட்சியில் இணையவேண்டும் என்று அமைச்சர்கள் கோரிக்கை முன்வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Send to Facebook

Read More

குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வாக்குமூலம்

பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் குற்றப்புலனாய்வு  திணைக்களம் நேற்று (20) வாக்குமூலமொன்றை பதிவுசெய்துள்ளது. ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பிலேயே குறித்த வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. சுமார் 5 மணித்தியாலயங்கள் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வாக்குமூலமளித்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. Send to Facebook

Read More

மஹிந்தவும் கோத்தாவும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் : சங்க சபை கூறுகின்றது

வரலாற்று காலத்திலிருந்து இலங்கை பெளத்தர்கள் மீது தொடரும் ஆக்கிரமிப்புக்கள் 2500 வருடங்களுக்கு பின்னரான இன்றும் குறைவில்லை. இந்நிலையில் நாட்டினை பிளவு படுத்தி பிரிவினைவாதிகளுக்கு எழுதிக்கொடுக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது என தேசிய சங்க சபை தெரிவிக்கின்றது. இதனை எதிர்க்கின்றமையினாலேயே விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டார். இதன் அடுத்த கட்டமாக விரைவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரும் கைது செய்யப்படுவர் என தேசிய சங்க சபையின் தலைவர் மாதுரு ஒயே தம்மிஸ்ஸர தேரர் தெரிவித்தார். கொழும்பு தேசிய நூலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார், அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் எவையும் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. இலங்கையில் பெளத்த மதத்திற்கு முரணான செயற்பாடுகளை அரசாஙகம் முன்னெடுத்து வருகின்றது. மறுபுறத்தில் இதற்கு எதிராக…

Read More

எடெக்ஸ் கண்காட்சி நேற்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது

ஸ்ரீலங்காவின் மிகப்பெரிய கல்விக் கண்காட்சியாக திகழும் எடெக்ஸ் கண்காட்சி நேற்று அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.   ஸ்ரீலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஸ டி சில்வா மற்றும் ஸ்ரீலங்காவிற்கான ஜப்பானியத் தூதுவர் கெனிச்சி சுகனுமா ஆகியோரால் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.   ஜப்பானியத் தூதரகத்தினால் ஒழுங்கு படுத்தப்பட்டிருந்த காட்சிக் கூடங்களை ஸ்ரீலங்காவிற்கான ஜப்பானியத் தூதுவர் கெனிச்சி சுகனுமா பார்வையிட்டதுடன், மாணவர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.   ஜப்பானைச் சேர்ந்த ஏழு பிரபல பல்கலைக்கழங்களின் பிரதிநிதிகள் தமது நாட்டிற்கு மாணவர்களை ஈர்த்துக்கொள்ளும் வகையில் அங்கு பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. Send to Facebook

Read More