வெற்றுப்பேச்சு முடிவுக்கு வந்துள்ளது, நடவடிக்கைக்கான காலம் உருவாகி விட்டது

அமெரிக்காவின் 45ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் அந்நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் நலனுக்காகவும் ஓய்வின்றி உழைப்பேன் என்று உறுதியளித்துள்ளார். அமெரிக்காவின் நலனே தனது முதன்மையான முன்னுரிமையாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் பதவியேற்றுக்கொண்ட கொண்ட பின்னர் ட்ரம்ப் தனது முதலாவது உத்தியோகபூர்வ உரையை நிகழ்த்தினார். டொனாலட் ட்ரம்ப் தனது உரையில் “அமெரிக்கர்கள் அனைவரும் இதனைக் கவனத்தில் கொள்ள வேண்டும், நீங்கள் மீண்டும் ஒருபோதும் புறக்கணிக்கப்படமாட்டீர்கள். அமெரிக்க குடிமக்கள் ஒவ்வொருவரின் நலனுக்காகவும் நான் ஓய்வின்றி பணியாற்றுவேன். அமெரிக்காதான் எனது முன்னுரிமையாக இருக்கும். இந்த தருணம் உங்களுடையது. இது உங்களுக்கானது. இங்கு கூடியுள்ள அனைவருக்கும் இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் அனைத்து அமெரிக்கர்களுக்குமானது இந்த தருணம். வொஷிங்டனில் மக்களுக்கான அதிகாரம் மீண்டும் வழங்கப்படும். இந்த நாளில் இருந்து நமது மண்ணில் புதிய பார்வையுடன்…

Read More

இரயில் பயணத்தின் போது ஆபாச படம் பார்த்து தொந்தரவு செய்பவர்களுக்கு எதிராக பிரித்தானிய பொலிசார் களமிறங்கி உள்ளனர்

இரயில் பயணத்தின் போது ஆபாச படம் பார்த்து தொந்தரவு செய்பவர்களுக்கு எதிராக பிரித்தானிய பொலிசார் களமிறங்கி உள்ளனர். பிரித்தானியாவில் இரயில் பயணத்தின் போது மொபைல் போன்களில் ஆபாச படம் பார்ப்பது அதிகரித்து வருகிறது. இந்த சமயத்தில் அருகில் இருக்கும் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் என்ன செய்வது என்று தெரியாமல் தர்ம சங்கட நிலைக்கு ஆளாகின்றனர். இது தொடர்பாக புகார்கள் குவிந்து வந்த நிலையில், பொலிசார் நடவடிக்கை எடுக்க தயாராகி உள்ளனர். ரயில் பயணத்தின் போது இது போன்ற செயல்களை முழுவதும் தடுக்க 61016 என்ற நம்பரை பொதுமக்கள் பயன்படுத்துமாறு பிரித்தானிய பொலிசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த நம்பருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாலே சமந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர். Send to Facebook

Read More

மனைவியை குத்திக்கொன்ற கணவன்!

பிரித்தானியாவில் மனைவியை கொடூரமாக குத்தி கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் Robert Bance (53), Victoria Bance (37). தம்பதிகளான இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் இவர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் 8ம் திகதி வெளியே சென்றுள்ளனர். அப்போது Victoria Bance வெளியே வேறு ஒரு நபருடன் பேசியுள்ளார். இதில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. டாக்சியில் இருவரும் திரும்பி வரும் போது கூட Robert Bance தனது மனைவியை கொன்று விடுமாறு மிரட்டியுள்ளார். வீட்டிற்கு வந்த போது இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்சனை வெடித்துள்ளது. இந்த நிலையில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற Robert Bance, தனது மனைவியை கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளார். உடனே தனது தவறை உணர்ந்த Robert…

Read More

இரண்டாம் உலகப் போர் குண்டு வெடிக்காத நிலையில் !!

பிரித்தானியாவின் வாட்டேர்லோ மற்றும் வெஸ்ட் மினிஸ்டர் என இரண்டு முக்கிய பாலங்கள் திடீரென்று பொலிசாரால் மூடப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் மிகவும் பரபரப்பாக மற்றும் போக்குவரத்து மிகுந்த பகுதியாக காணப்படும் Waterloo மற்றும் Westminster பாலங்கள் திடீரென்று பொலிசாரால் மூடப்பட்டது. இதனால் அந்த வழியாக சென்ற பெரும்பாலான பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகினர். இது குறித்து பொலிசார் தரப்பில் கூறுகையில், இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், வெடிகுண்டு வெடிக்காமல் இந்த நதியில் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாகவும், அதன் காரணமாகவே இது போன்ற முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு பாலங்களும் இன்னும் 3 மணி நேரத்திற்கு திறக்கப்பட்டுவிடும் எனவும், மக்களின் பாதுகாப்புக்காவே இது போன்று மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிவித்துள்ளனர். Send to Facebook

Read More

கனடாவை அச்சுறுத்தி வந்த செல்வக்குமார் சுப்பையா விடுதலை

கனடா நாட்டில் 24 ஆண்டுகளாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த மலேசிய நாட்டவரான செல்வக்குமார் சுப்பையா இம்மாதம் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விடுதலையாகும் அவரை மலேசியாவுக்கு நாடுகடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1992ஆம் ஆண்டு கனடா நாட்டு நீதிமன்றத்தால் இருவக்கு 24 ஆண்டுகள் சிறைத்தண்டடை விதிக்கப்பட்டது. குறித்த நபருக்கு எதிராக 19 பாலியல் துஷ்பிரயோக வழக்குகள், 28 போதைப்பொருள் கடத்தல் வழக்குகள் எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்தன. குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த 1992ஆம் ஆண்டு, அவருக்கு 24 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், அவரின் தண்டனை காலம் இம்மாதம் 29ஆம் திகதி நிறைவடைகின்றது. செல்வக்குமார் சுப்பையா விடுதலையாவதை தொடர்ந்து அவர் மலேசியாவிற்கே திருப்பி அனுப்பப்படவுள்ளார். எவ்வாறாயினும், செல்வகுமார் மலேசியாவிற்கு வருவதில் எந்த ஒரு தடையும்…

Read More

சுவிஸ் குடியுரிமைக்கு புதிய சட்டம் : இலங்கையர்களுக்கு வரும் தலையிடி…?

சுவிஸிற்கு சென்று தங்குவது என்றாலே கடினம், இவ்வாறிருக்க அந்த நாட்டில் குடியுரிமை பெறுதல் என்பது யாருக்கும் அவ்வளவு எளிதாக வழங்கப்படுவதில்லை. அந்த நாட்டில் பிறந்திருந்தாலும் அவர்களது பெற்றோர்கள் இந்த நாட்டை சேர்ந்தவர்கள் இல்லை என்றால், அவருக்கு குடியுரிமை வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒருவரின் தாத்தா, பாட்டி அகதிகளாக சுவிஸ் நாட்டிற்கு வந்திருந்தால் அவர்களின் மூன்றாம் தலைமுறை நபர்கள் வழக்கமான குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இவ்வாறு குடியுரிமையை பெற்றுக்கொள்வதற்கு 25 வயதிற்குற்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்கின்றது அந்த சட்டம். இந்த குடியுரிமை தொடர்பிலான வாக்கெடுப்பு அடுத்த மாதம் 12 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அந்த நாட்டு மக்களை தங்களுக்கு ஆதரவுனை தருமாறு சில தரப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் இதற்கு வலதுசாரி கட்சி மட்டும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு மட்டும் மொத்தம்…

Read More

அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்டு ட்ரம்ப் நாளை பதவியேற்பு: ஆதரவாளர்கள் குவிந்தனர்

அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் நாளை பதவியேற்கிறார். இதை யொட்டி பதவியேற்பு நிகழ்ச்சி யில் பங்கேற்பதற்காக வாஷிங் டனில் ஆயிரத்துக்கும் மேற்பட் டோர் குவிந்து வருகின்றனர். அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு ட்ரம்ப் வெற்றிப் பெற்றார். இதையடுத்து அமெரிக்காவின் 45-வது அதிபராக நாளை அவர் பதவியேற்கிறார். முன்னாள் அதிபர் அபிரஹாம் லிங்கன் முதன்முறையாக பதவியேற்ற போது பயன்படுத்திய பைபிளை யும், சிறு வயது முதல் தான் பயன்படுத்தி வரும் பைபிளை யும் ஆணையாக கொண்டு ட்ரம்ப் பதவியேற்கிறார். பள்ளி பருவத்தில் படித்துக் கொண்டிருந்தபோது 1955, ஜூன் 12-ம் தேதி அன்று குழந்தைகள் தினத்துக்காக அந்த பைபிளை ட்ரம்புக்கு அவரது தாயார் பரிசாக வழங்கினார். பதவியேற்பு விழாவுக்கான கொண்டாட்டங்கள் முறைப்படி நாளை தொடங்குகிறது. அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக உருவாக்க வேண்டும்…

Read More