ப்ளீஸ் நான் அப்படி இல்லை

https://www.youtube.com/watch?v=5KZOvQc27B4சின்னத்திரை தொகுப்பாளர்களில் மிகவும் பிரபலம் பாவனா. இவர் சமீபத்தில் த்ரிஷாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்தார். இதற்கு பலரும் தங்கள் கோபங்களை வெளிப்படுத்தினர், அதற்கு அவர் தற்போது உருக்கமாக பதில் அளித்துள்ளார். இதில் ‘நான் என்றுமே ஜல்லிக்கட்டிற்கு எதிரானவள் இல்லை, தமிழகத்தில் இருந்துக்கொண்டு எப்படி ஜல்லிக்கட்டை ஆதரிக்காமல் இருப்பேன். த்ரிஷா குடும்பத்தை மிகவும் தவறாக பேசினார்கள், அப்படி எல்லாம் பேச வேண்டாம் என்று தான் சொன்னேன். அதற்குள் என்னையும் சேர்த்து திட்ட ஆரம்பித்து விட்டார்கள்’ என மிகவும் மனம் நொந்து கூறியுள்ளார். Send to Facebook

Read More

விஜய் 61வது படத்தின் நாயகி இவர்தான்- உறுதியான தகவல்

பைரவா படத்தை தொடர்ந்து அடுத்து விஜய், அட்லீ இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் வேலைகள் மிகவும் வேகமாக நடந்துவரும் நிலையில் படத்தில் யாரெல்லாம் கமிட்டாகியுள்ளனர் என்பன தகவல்கள் இன்னும் சரியாக வெளியாகவில்லை. இந்நிலையில் இப்படத்தில் நாயகியாக விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா போன்ற படங்களில் நடித்த காஜல் அகர்வால் தான் நாயகி என உறுதியான தகவல் கிடைத்துள்ளது. Send to Facebook

Read More

சூர்யாவின் S3 படத்தின் பெயர் மாற்றம்

ஹரி இயக்கத்தில் சூர்யாவின் மாஸ் நடிப்பில் வரும் ஜனவரி 26ம் வெளியாக இருக்கும் படம் S3. முதல் இரண்டு பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து சிங்கம் படத்தின் மூன்றாம் பாகம் அமோகமாக தயாராகியுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கியுள்ள நிலையில் படத்தின் பெயர் S3ல் இருந்து C3(சிங்கம் 3) என்று மாறியிருப்பதாக கூறப்படுகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தில் ஸ்ருதிஹாசன், அனுஷ்கா ஆகியோர் நாயகிகளாக நடித்துள்ளனர். Send to Facebook

Read More

ஜீ.வி பிரகாஷ் எடுத்த அதிரடி சபதம்!

ஜி.வி.பிரகாஷ் ஜல்லிக்கட்டு, விவசாயிகள் குறித்து அடிக்கடி டுவிட்டரில் கருத்து தெரிவிப்பார். சமீபத்தில் கூட ஒரு ஜல்லிக்கட்டு பாடலை வெளியிட்டார். இந்நிலையில் இவர் தன் டுவிட்டர் பக்கத்தில் இனி நான் ஒரு போது அமெரிக்க உணவான பீட்சா, பர்க்கர் ஆகியவற்றை சாப்பிட மாட்டேன் என கூறியுள்ளார். இதற்கு ரசிகர்களும் தங்கள் ஆதரவை அவருக்கு தந்து வருகின்றனர். Send to Facebook

Read More

வவுனியாவில் திரையரங்குக்குள் குழப்பம்: பொலிசார் அதிரடி

வவுனியாவில் பைரவா திரைப்படம் பார்க்கச் சென்ற இளைஞர்களுக்குள் திரையரங்குக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. திரையரங்குக்கு சென்ற பொலிசார் நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். நேற்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவில் உள்ள திரையரங்கில் மாலை 5மணிக்கு போடப்பட்ட பைரவா திரைப்பட காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் சிலர் திரைப்பட காட்சிகளைப் பார்த்து கூச்சல் போட்டுக் கொண்டிருந்துள்ளனர். இதன்போது இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் வாய்தர்க்கம் ஏற்பட்டு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவம் தொடர்பில் வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தின் தமிழ் மொழி மூல தொலைபேசி முறைப்பாட்டுப் பிரிவுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. உடனடியாக விரைந்து செயற்பட்ட பொலிசார் திரையரங்குக்கு சென்று அங்கு ஏற்பட்ட குழப்ப நிலையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். திரைப்படக் காட்சி தொடர்ந்து இடம்பெற்றது. Send to Facebook

Read More

விஜய் பொண்டாட்டிக்கே இவ்வளவு விசிலா?

இளைய தளபதி விஜய்,கீர்த்தி சுரேஷ் நடித்த, பரதன் இயக்கிய பைரவா நேற்று ரிலீஸ் ஆனது. போஸ்டர்கள், பேனர்கள், கட் அவுட் என ரசிகர்கள் ஒரே ஆர்ப்பாட்டமான சந்தோஷத்தில் இருந்தனர். படம் பற்றி கலவையான கமெண்டுகள் வந்த போதிலும், இன்னும் தியேட்டர்கள் புல் தான். படத்தை பார்க்க விஐபிக்கள் பலரும் ஆவலாக இருக்க, ஒரு சிலர் படத்தை பார்த்துவிட்டும், கமெண்ட் போடாமல் மெளனமாக இருக்கிறார்கள்.விஜயின் மனைவி பைரவா பார்க்க தியேட்டருக்கு வந்தார். அவ்வளவு தான் விஜய் ரசிகர்கள் கூடி, ஒரே விசில், ஆர்ப்பாட்டம் தான். Send to Facebook

Read More

பைரவா சந்தோஷத்தில் இருக்கும் விஜய்க்கு ஏற்பட்ட சோகம்

விஜய்யின் பைரவா படம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் மகிழ்ச்சியில் இருக்கும் விஜய்க்கு ஒரு துக்க செய்தி. அதாவது அவரது ரசிகர் மன்ற மாவட்ட செயலாளராக நீண்ட நாட்களாக இருந்த காஞ்சிபுரம் இமயம் ரவி அவர்கள் மரணமடைந்துள்ளார். அவருக்கு நேரில் சென்று நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார். Send to Facebook

Read More