யாழ்ப்பாண இளைஞர்களின் ஜல்லிக்கட்டுக்கான ஆதரவுக் குரல். படங்கள்

யாழ்ப்பாண இளைஞர்களின் ஜல்லிக்கட்டுக்கான ஆதரவுக் குரல். தமிழரின் பாரம்பரியத்தினை நிலை நாட்டும் வகையிலான மாட்டு வண்டி வீதி உலா யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது… அதன் ஒர் அங்கமாக தமிழகத்தில் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கும் தமிழரின் வீர விளையாட்டான “ஏறு தழுவுதல்” – ஜல்லிக் கட்டிற்கான ஆதரவுக் குரல் யாழ் மண்ணிலிருந்து.. Send to Facebook

Read More

ஜேர்மனியில் அறிமுகமான பேஸ்புக்கின் Fake News Tool

சமூக வலைத்தளங்களின் வரிசையில் அசைக்க முடியாத அளவிற்கு முதலிடத்தில் திகழும் பேஸ்புக் ஆனது சமீப காலமாக பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகின்றது. இதில் பாதகமான விடயங்கள் தொடர்பில் அதிகமாக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது. இதன்படி பொய்யாக பரப்பப்படும் செய்திகள் அல்லது தகவல்கள் தொடர்பில் எச்சரிக்கை செய்யக்கூடிய அல்லது ரிப்போர்ட் செய்யும் டூல் ஒன்றினை அறிமுகம் செய்திருந்தது. இந்த டூல் ஆனது முதன் முறையாக அமெரிக்காவில் மட்டுமே அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. காரணம், அங்கு இடம்பெற்ற ஜனாதிபதித்தேர்தலின் போது பல பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டிருந்தன. எதிர்காலத்தில் இவ்வாறான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்கும் நோக்கில் பேஸ்புக் இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஜேர்மனியிலும் குறித்த டூலினை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி அமெரிக்காவிற்கு வெளியே முதன் முறையாக Fake News Tool அறிமுகம் செய்யப்படும் நாடாக ஜேர்மனி இடம்பிடித்துள்ளது….

Read More

கடவுச்சொல்லாக ECG- தொழில்நுட்பத்தின் அபார வளர்ச்சி

தனிநபரின் உடல்நலம் குறித்த தகவல்களை பாதுகாக்க புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்காவின் பிங்கம்டன் பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் ஒருவரான பேராசிரியர் ஷன்பெங் ஜின் கூறுகையில், தற்போதைய சூழலில் பயன்படுத்தப்படும் Encrypt தொழில்நுட்பங்கள் மிகவும் சிக்கல் நிறைந்தவையாகவும், செலவு பிடிப்பதாகவும் உள்ளது. எனவே இதற்கு பதிலாக மருத்துவதுறைக்கென்று பிரத்யேக தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இதன்படி ECG வரைபடத்தை கடவுச்செல்லாக பயன்படுத்தி அவரது உடல்நிலை குறித்த விபரங்களை பாதுகாக்கும் முறையை உருவாக்கி வருகிறோம். இதன்மூலம், நோயாளிகளின் உடல்நலம் குறித்த மின்னணு தகவல்களை சுலபமாகவும், மலிவாகவும் பாதுகாக்க வழி ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். Send to Facebook

Read More

கடந்த ஆண்டில் மட்டும் போக்கிமேன் கோ ஹேம் ஈட்டிய வருமானம் எவ்வளவு தெரியுமா?

போக்கிமேன் கோ ஹேம் பற்றி அறியாதவர்கள் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு பல சாதனைகளையும், சோதனைகளையும் உருவாக்கிய ஒரு மொபைல் ஹேம் ஆகும். இக் ஹேம் அறிமுகமாகிய சில தினங்களில் மட்டும் தரவிறக்கத்திலும், வருமானம் ஈட்டுதலிலும் சாதனை படைத்திருந்தது. இந் நிலையில் கடந்த (2016) வருடத்தில் ஏறத்தாழ 950 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருவாயாக ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக் ஹேமானது 2016ம் ஆண்டு ஜுலை மாத்திலேயே அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டு ஐந்து மாதங்களில் மட்டும் 950 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டியமை பெரும் சாதனையாக பார்க்கப்படுகின்றது. தற்போதும் போக்கிமேன் கோ ஹேமிற்கு உலகளாவிய ரீதியில் பலத்த வரவேற்பு காணப்படுகின்ற நிலையில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வசூலை எட்டும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. Send to Facebook

Read More

ஐபோனில் PDF கோப்புகளை ப்ரிண்ட் செய்வது எப்படி?

ஐபோனில் PDF கோப்புகளை ப்ரிண்ட் செய்வதற்கான வழிகள் நாம் பிரிண்ட் செய்ய வேண்டிய ஆவணத்தை முதலில் open செய்ய வேண்டும். பின் பயன்பாட்டில் இருக்கும் ஷேர் பட்டனை டாப் செய்து, பிரிண்ட் டாப் செய்ய வேண்டும். ஒரு பாப் அப் தோன்றி உங்கள் பிரிண்டர் தேர்வை நிகழ்த்த சொல்லும். உடன் ஒரு பிரிண்ட் ப்ரிவியூ கீழே தோன்றும். ப்ரீவியூ பக்கத்தை நீங்கள் ஸூம் செய்வது போல இரண்டு விரல்களால் விரித்து பார்க்கலாம். பின் கீழே இடது பக்கம் இருக்கும் ஷேர் பட்டனை டாப் செய்ய வேண்டும். பின் இப்போது ஷேர் ஷீட் வழியாக நமது விருப்பப்படி எந்த பயன்பாட்டிற்கு வேண்டுமானாலும் இதை பகிர்ந்து கொள்ளலாம். Send to Facebook

Read More

ஐபோன் வடிவில் துப்பாக்கி

அமெரிக்காவில் மின்னெ கோடாவை சேர்ந்த ஒரு நிறுவனம் சமீபத்தில் வெளியான ஐபோன் 7 தொலைபேசி வடிவில் கைத்துப்பாக்கி தயாரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் பொலிஸாருக்கு ஐபோன் வடிவிலான துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பெல்ஜியம் பொலிஸார் இந்த துப்பாக்கி குறித்து ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ‘ஐபோன்’ வடிவிலான கைத்துப்பாக்கி அடுத்த வாரம் சந்தைக்கு விற்பனைக்கு வருகிறது. அதற்கான முன்பதிவுகள் அதிக அளவில் கிடைத்துள்ளது. தற்போது அமெரிக்காவில் அதே வடிவிலான துப்பாக்கி விற்பனைக்கு வரும் பட்சத்தில் அது கண்டம் விட்டு ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவும் சூழ்நிலை உள்ளது. மேலும் இந்த துப்பாக்கியானது தீவிரவாதிகளின் கைகளில் கிடைக்கக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதாகவும், எனவே மக்கள் மற்றும் பொலிஸார் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது. Send to Facebook

Read More

முப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்ளுங்கள் : நாட்டுமக்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை

வரட்சியினால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கு முப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்வதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வரட்சியினால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளில் அரச உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக முப்படையினரின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்வதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். இன்று (13) முற்பகல் இலங்கை சீனக்குடா விமானப்படைக் கல்லூரியில் நடைபெற்ற விமானப்படை பயிலுனர்களை அதிகாரம் பெற்றவர்களாக நியமித்தல் மற்றும் விமானப்படை வீர்ர்கள் பயிற்சி நிறைவுசெய்து வெளியேறும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் மக்கள் இன்னல்களை எதிர்நோக்கும் சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குதல் தொடர்பாக முப்படையினரின் பணிகள் அளப்பரியவை எனவும், முப்படைகளினதும் தலைவர் என்ற வகையிலும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையிலும் படையினர் மீது தான்…

Read More

நோக்கியாவின் புதிய அன்ரோயிட் கைப்பேசி: வெளியாகும் திகதி இதோ

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் கீழ் செயற்பட்ட நோக்கியா நிறுவனம் மீண்டும் தனியாக பிரிந்து புதிய கைப்பேசிகளை அறிமுகம் செய்ய தயாராகிவருகின்றது. இதன்படி அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை முதன் முதலாக அறிமுகம் செய்யவுள்ளது. Nokia 6 எனும் இக் கைப்பேசியானது அடுத்த மாதம் 26ம் திகதி இடம்பெறும் Mobile World Congress நிகழ்வில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து முதன் முதலாக சீனாவிலேயே விற்பனைக்கு வரவுள்ளது. குறித்த நிகழ்வில் Nokia 6 கைப்பேசி தவிர்ந்த மேலும் சில சாதனங்கள் தொடர்பான அறிவித்தலையும் வெளியிட நோக்கியா நிறுவனம் தயாராகியுள்ளது. இதேவேளை அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்ட நோக்கிய கைப்பேசிகள் பெரும் வரவேற்பினைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் அன்ரோயிட் இயங்குதளத்தினை பயன்படுத்துவதற்கான அனுமதியினை அடுத்த 10 வருடங்களுக்கு நோக்கியா நிறுவனம் பெற்றுள்ளது. Send to Facebook

Read More

சாதனை படைத்த சாம்சுங்

இலத்திரனியல் உலகைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் Consumer Electronics Show (CES) நிகழ்வு இடம்பெறுவது வழக்கமாகும். இந்நிகழ்வின்போது பல இலத்திரனியல் சாதன வடிவமைப்பு நிறுவனங்களும் கலந்துகொண்டு அந்த ஆண்டு விற்பனைக்கு தயாராகவுள்ள பொருட்களை அறிமுகம் செய்தல் அல்லது புதிதாக வடிவமைக்க காத்திருக்கும் சாதனங்கள் தொடர்பிலான தகவல்களை தெரிவிக்கும். இது தவிர தலைசிறந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றுக்கு விருதுகளும் வழங்கப்பட்டுவருகின்றது. இவ்வருடத்திற்கான CES நிகழ்வானது அமெரிக்காவின் Las Vegas நகரில் இடம்பெற்றுவருகின்றது. இதில் சாம்சுங் சார்பாக 3,880 இற்கும் அதிகமான காட்சிப்படுத்துபவர்கள் பங்குபற்றியுள்ளனர். இதன்போது சாம்சுங் நிறுவனத்திற்கு 120 இற்கும் அதிகமான விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுள் QLED TV, Chromebook Plus, Pro Plus உட்பட மேலும் பல சாதனங்களுக்கான விருதுகளும் அடங்கும். இதேவேளை CES ஆனது 50வது ஆண்டு நிறைவினைக் கொண்டாடுவதும் சுட்டிக்காட்டத்தக்கது….

Read More