யாழ்ப்பாண இளைஞர்களின் ஜல்லிக்கட்டுக்கான ஆதரவுக் குரல். படங்கள்

யாழ்ப்பாண இளைஞர்களின் ஜல்லிக்கட்டுக்கான ஆதரவுக் குரல். தமிழரின் பாரம்பரியத்தினை நிலை நாட்டும் வகையிலான மாட்டு வண்டி வீதி உலா யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது… அதன் ஒர் அங்கமாக தமிழகத்தில் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கும் தமிழரின் வீர விளையாட்டான “ஏறு தழுவுதல்” – ஜல்லிக் கட்டிற்கான ஆதரவுக் குரல் யாழ் மண்ணிலிருந்து.. Send to Facebook

Read More

கடந்த ஆண்டில் மட்டும் போக்கிமேன் கோ ஹேம் ஈட்டிய வருமானம் எவ்வளவு தெரியுமா?

போக்கிமேன் கோ ஹேம் பற்றி அறியாதவர்கள் இருக்கவே முடியாது. அந்த அளவிற்கு பல சாதனைகளையும், சோதனைகளையும் உருவாக்கிய ஒரு மொபைல் ஹேம் ஆகும். இக் ஹேம் அறிமுகமாகிய சில தினங்களில் மட்டும் தரவிறக்கத்திலும், வருமானம் ஈட்டுதலிலும் சாதனை படைத்திருந்தது. இந் நிலையில் கடந்த (2016) வருடத்தில் ஏறத்தாழ 950 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருவாயாக ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக் ஹேமானது 2016ம் ஆண்டு ஜுலை மாத்திலேயே அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டு ஐந்து மாதங்களில் மட்டும் 950 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்டியமை பெரும் சாதனையாக பார்க்கப்படுகின்றது. தற்போதும் போக்கிமேன் கோ ஹேமிற்கு உலகளாவிய ரீதியில் பலத்த வரவேற்பு காணப்படுகின்ற நிலையில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வசூலை எட்டும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. Send to Facebook

Read More

ஐபோனில் PDF கோப்புகளை ப்ரிண்ட் செய்வது எப்படி?

ஐபோனில் PDF கோப்புகளை ப்ரிண்ட் செய்வதற்கான வழிகள் நாம் பிரிண்ட் செய்ய வேண்டிய ஆவணத்தை முதலில் open செய்ய வேண்டும். பின் பயன்பாட்டில் இருக்கும் ஷேர் பட்டனை டாப் செய்து, பிரிண்ட் டாப் செய்ய வேண்டும். ஒரு பாப் அப் தோன்றி உங்கள் பிரிண்டர் தேர்வை நிகழ்த்த சொல்லும். உடன் ஒரு பிரிண்ட் ப்ரிவியூ கீழே தோன்றும். ப்ரீவியூ பக்கத்தை நீங்கள் ஸூம் செய்வது போல இரண்டு விரல்களால் விரித்து பார்க்கலாம். பின் கீழே இடது பக்கம் இருக்கும் ஷேர் பட்டனை டாப் செய்ய வேண்டும். பின் இப்போது ஷேர் ஷீட் வழியாக நமது விருப்பப்படி எந்த பயன்பாட்டிற்கு வேண்டுமானாலும் இதை பகிர்ந்து கொள்ளலாம். Send to Facebook

Read More

முப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்ளுங்கள் : நாட்டுமக்களுக்கு ஜனாதிபதி ஆலோசனை

வரட்சியினால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுப்பதற்கு முப்படையினரின் உதவியை பெற்றுக்கொள்வதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வரட்சியினால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளில் அரச உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக முப்படையினரின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்வதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். இன்று (13) முற்பகல் இலங்கை சீனக்குடா விமானப்படைக் கல்லூரியில் நடைபெற்ற விமானப்படை பயிலுனர்களை அதிகாரம் பெற்றவர்களாக நியமித்தல் மற்றும் விமானப்படை வீர்ர்கள் பயிற்சி நிறைவுசெய்து வெளியேறும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் மக்கள் இன்னல்களை எதிர்நோக்கும் சந்தர்ப்பங்களில் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குதல் தொடர்பாக முப்படையினரின் பணிகள் அளப்பரியவை எனவும், முப்படைகளினதும் தலைவர் என்ற வகையிலும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையிலும் படையினர் மீது தான்…

Read More

நோக்கியாவின் புதிய அன்ரோயிட் கைப்பேசி: வெளியாகும் திகதி இதோ

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் கீழ் செயற்பட்ட நோக்கியா நிறுவனம் மீண்டும் தனியாக பிரிந்து புதிய கைப்பேசிகளை அறிமுகம் செய்ய தயாராகிவருகின்றது. இதன்படி அன்ரோயிட் இயங்குதளத்தில் செயற்படக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசியினை முதன் முதலாக அறிமுகம் செய்யவுள்ளது. Nokia 6 எனும் இக் கைப்பேசியானது அடுத்த மாதம் 26ம் திகதி இடம்பெறும் Mobile World Congress நிகழ்வில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து முதன் முதலாக சீனாவிலேயே விற்பனைக்கு வரவுள்ளது. குறித்த நிகழ்வில் Nokia 6 கைப்பேசி தவிர்ந்த மேலும் சில சாதனங்கள் தொடர்பான அறிவித்தலையும் வெளியிட நோக்கியா நிறுவனம் தயாராகியுள்ளது. இதேவேளை அன்ரோயிட் இயங்குதளத்தினைக் கொண்ட நோக்கிய கைப்பேசிகள் பெரும் வரவேற்பினைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் அன்ரோயிட் இயங்குதளத்தினை பயன்படுத்துவதற்கான அனுமதியினை அடுத்த 10 வருடங்களுக்கு நோக்கியா நிறுவனம் பெற்றுள்ளது. Send to Facebook

Read More

வாட்ஸ் அப்பில் GIF பைல்களை அனுப்புவது இனி ஈஸி

வாட்ஸ் அப் பீட்டா வெர்ஷனில் GIF பைல்களை அனுப்புவது இனி ரொம்ப ஈஸி, Giphy மூலமாக, GIF-களை தேடும் வசதியையும் வாட்ஸ் அப் அறிமுகம் செய்துள்ளது. இதற்கு முதலில் நீங்கள் பீட்டா டெஸ்டராக உங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும், இதற்கு கூகுள் ப்ளே ஸ்டோர் சென்று வாட்ஸ் அப்பில், “Become a Beta Tester” என்ற ஆப்ஷனை தெரிவு செய்து, I Am In என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். பின்னர் வாட்ஸ் அப்பை அப்டேட் செய்யும் போது இந்த வசதி கிடைக்கப்பெறும். வழக்கமான எமோஜிகளுக்கு அருகே இந்த புதிய வசதியும் இருக்கும், குறிப்பிட்ட GIF-களை தேடி பெறும் வசதியும் உள்ளது. மிக முக்கியமாக ஒரே முறையில் 30 புகைப்படங்களை அனுப்பவும் முடியும், விரைவில் இந்த அற்புதமான வசதி அனைவருக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Send…

Read More

உங்க ஸ்மார்ட்போன் சூடாகாமல் இருக்கணுமா? இதை மட்டும் செய்யுங்க

உலகளவில் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஸ்மார்போன்களில் பொது பிரச்சனையாக பலருக்கும் இருப்பது சீக்கிரம் அது அதிக சூடாகி விடுவது தான். அப்படி சூடாவதை தடுப்பது எப்படி? ஸ்மார்ட்போன்களை அதிக நேரம் சார்ஜ் போடகூடாது. பலர் சார்ஜ் போட்டு விட்டு அப்படியே மறந்து விடுவார்கள். இது தவறாகும். மொபைல் போனில் நடக்கும் மின்னணு பொருட்களின் செயல்பாடுகள் மூலமே வெப்பமானது உருவாகிறது. பெரும்பாலும் அதிவேகமாக இயங்கக்கூடிய மொபைல் போன்கள் அடிக்கடி சூடாகும். ஒரே நேரத்தில் பல விதமான செயலிகளை உபயோகப்படுத்தகூடாது. இதனால் செல்போனின் வேகம் குறைவதுடன் அது சீக்கிரம் சூடாகி விடுகிறது. 3G மற்றும் 4G போன்ற தரவுகளை அதிக நேரத்திற்கு பயன்படுத்தினால் போனுக்கு வெப்பம் உண்டாகும். ஸ்மார்ட்போனை தொடர்ந்து பல மணி நேரம் விளையாடுவதற்கு பயன்படுத்தினால் போன் வெப்பம் அடைகின்றது ஸ்மார்ட்போனின் ஓஎஸ்…

Read More

விரைவில் அறிமுகமாகின்றது Apple Watch 3

ஆப்பிள் நிறுவனம் தனது Apple Watch 2 இனை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் அறிமுகம் செய்திருந்தது. இக் கடிகாரமானது மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பினைப் பெற்றதை தொடர்ந்து புதிய பதிப்பினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருந்தது. Apple Watch 3 எனும் குறித்த கைக் கடிகாரம் வடிவமைக்கப்பட்டு தற்போது விற்பனைக்கு தயாராகிவிட்டது. இந் நிலையில் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இத் தகவலை Digitimes சஞ்சிகை வெளியிட்டுள்ளது. மூன்றாம் தலைமுறையாக வெளிவரவுள்ள இக் கடிகாரமானது வடிவமைப்பில் முன்னைய தலைமுறையினை ஒத்திருந்த போதிலும் புதிய அம்சங்களையும் உள்ளடக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் மேலதிக சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. Send to Facebook

Read More

சூப்பரான வசதியுடன் உலகின் முதல் ஸ்மார்ட்போன்

ஆசஸ் நிறுவனம் 8 GB RAM வசதியுடன் கூடிய முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அமெரிக்காவின் லாஸ்வேகாஸில் நடந்து வரும் கன்சூமர் எலக்ட்ரானிக் கண்காட்சியில் Asus ZenFone AR அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், டேங்கோ (Tango) மற்றும் டேட்ரீம் (Daydream) என இரு அம்சங்களை கொண்டுள்ளது. டேங்கோ மூலம் புகைப்படங்களை முப்பரிமாண தரத்தில் பார்க்க முடியும், இதுதவிர, ஆட்டோ ஃபோகஸ் வசதி கொண்ட 23 மெகாபிக்ஸல் கமெரா வசதியும், 5.7 இன்ச் தொடுதிரை வசதியும் உள்ளது. குறிப்பாக உலகின் அதிவேகமான குவால்கோம் ஸ்நாப்ட்ராகன் 821 புராசஸருடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. Send to Facebook

Read More

உங்கள் ஐபோனைக் கூட மவுஸாக மாற்றலாம் தெரியுமா?

நீங்கள் ஆப்பிள் மேக்புக் வைத்திருக்கிறீர்களா? அதில் எப்போதாவது உங்கள் ஐபோனை பயன்படுத்தி கட்டுப்படுத்த முயன்றது உண்டா? உங்கள் மேக் கருவியை, ஐபோன் அல்லது ஐபாட் பயன்படுத்தி ஒரு வயர்லெஸ் ரிமோட் கண்ட்ரோல் அமைக்க ஆப் ஸ்டோரில் ஏகப்பட்ட ஆப்ஸ்கள் இருக்கிறது. அதில் ஒன்று தான் Remote Mouse என்ற ஆப். இதை பயன்படுத்தும் முறையை பார்க்கலாம், முதலில் உங்கள் ஐபோனில் Remote Mouse என்ற அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்து கொள்ள வேண்டும். இதே போல, இந்த பயன்பாட்டின் மேக் வெர்ஷனையும் மேக்புக்கில் பதிவிறக்கம் செய்து சாஃப்ட்வேரை ரன் செய்து கொள்ளவேண்டும். பின்பு, ஐபோனில், Remote Mouse என்ற செயலியை ஓபன் செய்து ஐபோன் மற்றும் மேக் ஆகிய இரண்டையும் இணைக்க இரண்டிலும் ‘ஸ்டார்ட்’ ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். (நீங்கள் வைஃபை உடன் இணைந்திருக்க வேண்டும் என்பதும்…

Read More

செல்பி பிரியர்களை ஆச்சர்யத்தில் மூழ்கடிக்க வருகிறது Vivo V5 Plus

சந்தையில் ஸ்மார்ட் போன்கள் அதிகமாக விற்கப்பட்டாலும், மக்கள் விரும்புவது செல்ஃபி எடுப்பதற்கு நல்ல மொபைல் வேண்டுமென்று தான். ஆம், இப்போதெல்லாம், கைப்பேசியின் பின்புற காமெராவை யாரும் அதிகமாக பயன்படுத்துவதில்லை. எல்லாம் முன்பக்க காமெராவினால் எல்லாம் செல்ஃபி மையமாகிவிட்டது. இந்நிலையில், முன்னனி ஸ்மார்ட் கைப்பேசி நிறுவனமான vivo வருகிற 23 ஆம் திகதி ஒரு புத்தம் புதிய vivo v5 plus கைப்பேசி ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த கைப்பேசியானது, செல்ஃபி பிரியர்களை கவர்வதற்காகவே தயாரிக்கப்பட்டுள்ளது. ஆம் இரண்டு முன்பக்க கமெராவுடன் அறிமுகமாக உள்ளது. இது, கடந்த நவம்பர் மாதம் வெளியான Vivo V5 யை விட முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் எனவும், V5 யை விட விலை அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. Vivo V5 Plus இன் சிறப்பம்சங்கள்: இரட்டை சிம் வசதி 5.5…

Read More