இலங்கையை வீழ்த்தியது தென்னாபிரிக்கா

இலங்கை அணிக்கெதிரான முதலாவது இருபதுக்கு-20 போட்டியில் தென்னாபிரிக்க அணி 19 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது போட்டியின் ஆரம்பத்திலிருந்தே மழைக்குறுக்கிட்டதன் காரணத்தால் அணிக்கு 10 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 10 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுகளை இழந்து 126 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. தென்னாபிரிக்க அணி சார்பில் டேவிட் மில்லர் 18 பந்துகளுக்கு 40 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 10 ஓவர்கள் நிறைவில்  6 விக்கட்டுகளை இழந்து 107  ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பில் டிக்வெல்ல 43 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என தென்னாபிரிக்க அணி முன்னிலை வகிக்கின்றது. Send to Facebook

Read More